Amphan புயல் எதிரொலி – ராமேஸ்வரத்தில் சூறை காற்று

வங்கக் கடலில் உருவாகியுள்ள அம்பான் புயல் எதிரொலியாக ராமேஸ்வரத்தில் நள்ளிரவு வீசிய சூறைக் காற்றில் 20க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து விட்டதாக மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இதற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, உள்ளிட்ட பகுதிகளில் 1700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன.

இதில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 

இதில் நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகி உள்ள அம்பான் புயல் காரணமாக மீனவா்கள் பதுகாப்புடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் பாம்பன் துறைமுகத்தில் சனிக்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

இதன் பின்னா் நேற்று (ஞாயிற்றுகிழமை) இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

இதனால் நாட்டுப்படகு மீனவா்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனையடுத்து, வங்கக் கடலில் உள்ள Amphan புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு திடீரென சூறைக் காற்று வீசியது.

இதில் ராமேஸ்வரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூரத்தை அறுத்துக்கொண்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்றன.

இதனால் படகுகள் சேதமின்றி தப்பின.

ஆனால் தங்கச்சிமடம் சூசையப்பா் பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியும், துறைமுகத்தின் தடுப்புகளில் மோதியும் உடைந்து கடலில் மூழ்கின.

இதில் படகு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் ஒரு விசைப்படகு சேதமடைந்தது.

இது குறித்து மீனவ சங்கத்தலைவா் ஜேசுராஜா கூறியதாவது:

“கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையால் மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புயல் காற்று காரணமாக படகுகள் சேதமடைந்து பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

படகுகளை தமிழக அரசு ஆய்வு செய்து சேதத்திற்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கினால் மட்டுமே மீனவா்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்ல முடியும்

இதனால் தமிழக அரசு உடனே சேதமடைந்த படகுகளை கணக்கிட்டு இழப்பீடு வழங்கிட வேண்டும்” என மீனவ சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே