புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது..!!

வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்ததாவது: திரிகோணமலையிலிருந்து 300 கி.மீ., தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 700 கி.மீ., தொலைவிலும், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவிலும் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 6 மணி நேரத்தில் புயல் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 கி.மீ., வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது; புயல் கரையை கடக்கும் போது 95 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். 

கரையை கடந்த பின், மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வரும் புயல், நாளை மறுநாள் (டிச.,4), குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே