ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வரும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.