முன்னாள் குஜராத் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் காலமானார். அவருக்கு வயது 92.

முன்னதாக கடந்த மாதம் கொரோனா தொற்றினால் கேசுபாய் பட்டேல் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேசுபாய் பட்டேல், பாஜகவில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். குஜராத் மாநிலத்தின் முதல்வராக இரு முறை பொறுப்பில் இருந்துள்ளார்.

கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல், இன்று காலை மூச்சு விட சிரமமேற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே