இராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

டீசல் விலை உயர்வுக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இராமேஸ்வரத்தில் உள்ள 900 விசைப்படகுகள் டீசல் மூலம் இயங்குகிறது.

அதற்காக தமிழக அரசு சார்பில் மானிய விலையில் ஒரு விசைபடகிற்கு மாதம் 1800 லிட்டர் டீசல் வழங்குகிறது.

ஆனால் நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் விசைப்படகு மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்த டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்து அம்மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

எல்லை தாண்டியதாக பறிமுதல் செய்யப்படும் படகுகளுக்கு இலங்கை அதிக அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும், இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களுக்கு போதிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே