கொரோனா பொருளாதார நெருக்கடியால் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 50 ஆயிரத்தை கடந்துவிட்ட ஜெர்மனியில், மாகாண நிதியமைச்சர் ஒருவர் கொரோனாவினால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியின் Hesse மாகாணத்தின் நிதியமைச்சராக கடந்த 10 ஆண்டுகாலமாக இருந்து வரும் Thomas Schaefer-ன் (வயது 54), சடலம் ரயில் தண்டவாளம் அருகே நேற்று கண்டெடுக்கப்பட்டது.

Thomas Schaefer-ன் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அம்மாகாண தலைவர் Volker Bouffier, கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை எவ்வாறு சரிசெய்யப் போகிறோம் என மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக Schaefer தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

Schaefer-ன் இழப்பு கடும் அதிர்ச்சியையும், மீளாத் துயரையும் தங்களுக்கு தந்திருப்பதாகவும், கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இரவு, பகல் பாராமல் நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை கொடுத்து, தேவையான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தார் எனவும், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் அவரின் உதவி எங்களுக்கு மிகவும் தேவையாக இருந்த நிலையில் திடீரென அவரின் மரணம் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் இருப்பதாக உணர்ச்சிவசப்பட்ட முறையில் Volker Bouffier தெரிவித்தார்.

ஜெர்மனியின் நிதித்தலைநகராக அறியப்படும் frankfurt நகரம் Hesse மாகாணத்தில் தான் அமைந்துள்ளது. Deutsche Bank, Commerzbank போன்ற மிகமுக்கிய வங்கிகள் frankfurt நகரில் தான் தங்களின் தலைமையகத்தை அமைத்துள்ளன.

ஜெர்மனியில் கொரோனா பரவல் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 450 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே