JUST IN : தொடரும் கனமழை… சென்னையில் விடுமுறை இல்லை…

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் கன மழைபெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுக்க இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து கன மழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே