சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை காரணமாக சென்னையில் கிண்டி, சோழிங்கநல்லூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சீன அதிபரின் வருகையை ஒட்டி சென்னையில் கிண்டி, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பெருங்களத்தூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதிக்கபடாமல் மதுரவாயல் வழியாக திருப்பி விடப்பட்டது.
இதனால் மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிண்டி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், வெளியூர் வாகனங்கள் சென்னைக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முட்டுக்காடு சாலையில் மொத்தமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன. வாகன ஓட்டிகள் திக்குமுக்காடிப் போகினர்.
பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் வாகனங்கள் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி திருப்பி விடப்பட்டது.
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.