வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோயம்பேடு பூக்கடையில் இருந்து வாங்கிவந்து வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான்.

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக அதிகமாக மக்கள் சென்று வரும் இடமான கோயம்பேடு மார்க்கெட்டில் முதற்கட்டமாக 4 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் வியாபாரிகள் என்பதால் அவர்களுடன் தொடர்பில் இருந்து மேலும் 3 பேருக்கு கொரோனா பரவியது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வியாபாரிகளிடம் இருந்து சுமார் 38 பேருக்கு கொரோனா பரவியதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு கொரோனா வைரஸ் அதிவேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கோயம்பேடு மார்க்கெட்டின் பூ மற்றும் பழச்சந்தை மாதவரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

மேலும், கோயம்பேடு சந்தையில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கோயம்பேடு பூக்கடையில் இருந்து வாங்கிவந்து வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், அவர்களிடம் இருந்து பூ வாங்கிய நபர்களுக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே