புரெவி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் பாம்பனுக்கு 490 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

திருகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் இன்று இரவு திருகோணமலையை அடையும், மறுநாள் மன்னார்வளைகுடா வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, புயல் வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரும் 4ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவலில் படி, புரெவி புயல் நாளை நண்பகலில் பாம்பனுக்கு மிக அருகில் வரும் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் புரெவி புயல் பாம்பனை நெருங்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே புரெவி புயலின் எதிரொலியாக பாம்பனில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே