தொடர் கனமழையில் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நீலகிரியில் உள்ள உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் ஆடலூர், பன்றிமலை பகுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்