நாகை, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

தமிழகத்தில் 11 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் மூன்றாம் என்று எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ,பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்த நிலையில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலின் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று புயலாக வலுவடைந்து இலங்கை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே