வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கும் வரி விதிப்பா?

கறுப்பு பணத்தை மீட்கும் மற்றொரு முயற்சியாக கணக்கில் காட்டப்படாத தங்கத்திற்கு வரி விதிக்கும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள் தங்கள் பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பல லட்சம் கோடி பணம் மீண்டும் தங்கமாக பதுங்கி விட்டதாக தெரிகிறது.

இந்தியர்களிடம் சுமார் 20 ஆயிரம் டன் அளவிற்கு தங்கம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கணக்கில் காட்டாமல் இறக்குமதி செய்தது மற்றும் பரம்பரையாக வைத்திருந்த தங்கம் என மொத்தம் 24 ஆயிரம் டன் அளவிற்கு தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியர்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 106 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவற்றைக் கணக்கில் கொண்டு வர மத்திய அரசு விரைவில் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

அதன்படி தனிநபர் ஒருவர் ரஷீது இல்லாமலும், கணக்கில் காட்டப்படாமல் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும் என்றும், இதற்கு 30% வரை வரி விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே