குலாப் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். குலாப் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இதற்கு பாகிஸ்தான் குலாப் என்று பெயர் வைத்துள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குலாப் புயல் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு இடையே இன்று நள்ளிரவில் கரையை கடக்கவுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து, வடக்கு ஆந்திரா மற்றும் தென் ஒடிசாவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.