சுங்கச்சாவடிகளில் ஜனவரி 18 வரை 50 சதவீத கட்டணம் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்றும்; இங்குள்ள சுங்கச்சாவடிகள் மட்டும் சரியான முறையில் செயல்பட்டு கட்டணத்தை வசூல் செய்து வருகிறது என்றும்; இனிவரும் நாட்களில் இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான மனுவை விசாரணை செய்த நீதிபதி சத்யநாராயணா அமர்வு, ஏற்கனவே மதுரவாயல் – வாலாஜா இடையேயுள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய கூடாது என்று உத்தரவிட்டனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ” மதுரவாயல் முதல் வாலாஜா வரை சாலையில் உள்ள குழிகள் நிரப்பட்டுள்ளது. 

இந்த சாலையில் ஆறுவழி சாலைகள் பணிகளும் நடைபெற்று வருகிறது ” என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ” முறையாக பராமரிக்காத சாலைக்கு எந்த வழியிலான சட்டத்தின் கீழ் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது?.

எதன் அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்பட்டது?. நாங்கள் சாலையில் பயணம் செய்து பார்வையிட்ட போது, அது குண்டும் குழியுமாக இருக்கிறது.

பொங்கல் வரை வாலாஜா – மதுரவாயல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை விதித்து உத்தரவிடுகிறோம்.

இவ்வழக்கின் மறு விசாரணை மற்றும் வாதங்கள் பிற்பகல் நடைபெறும் ” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், ” சென்னை மதுரவாயல் – வாலாஜா இடையவுள்ள சுங்கச்சாவடிகளில் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வரை பாதி கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும்.

நெடுஞ்சாலைகள் பெயரிளவிலேயே பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது. சொந்த வேலைக்காக நான் வேலூருக்கு சென்று திரும்புகையிலேயே சாலையின் தரம் தெரியவந்தது.

முறையாக பராமரிக்காத சாலைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்ய எந்த சட்டம் வழிவகை செய்கிறது? ” என்ற கேள்வியை முன்வைத்த நீதிபதிகள், இவ்வழக்கை மீண்டும் ஜனவரி 18 ஆம் தேதி விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே