மறைமுக தேர்தலை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் : திமுகவினர் மனு

மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழுவிற்கான மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் மறைமுக தேர்தல் தொடர்பாக புகார் மனு அளித்தனர்.

அதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி திமுக ஒன்றிய கவுன்சிலர் தாக்கப்பட்டு, அவரது வாகனத்திற்கு தீ வைத்ததை சுட்டிக் காட்டி, இன்று நடைபெற உள்ள உள்ளாட்சி மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

மறைமுக தேர்தலை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் திமுகவினர் வலியுறுத்தினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே