மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தலையில் பெட்டி..

கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு காப்பி அடிப்பதை தவிர்க்க புதிய உத்தியை பள்ளி நிர்வாகம் கையாண்டுள்ளது.

காவிரியில் உள்ள அந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் தலையில் அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டன.

முகம் மட்டுமே தெரியும்படி விட்டுவிட்டு மற்ற பகுதிகள் அட்டை பெட்டியினால் மறைக்கப்பட்டிருந்தன.

இதனால் மாணவர்கள் அருகில் உள்ள சக மாணவர்களைப் பார்த்து தேர்வு எழுத முடியாது என்றும், அப்படியே காப்பி அடிக்க முயன்றாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு கல்வித்துறை சார்பில் அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே