தமிழ் திரையுலகில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்!

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் நடிக்க இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவை தமிழில் எழுதி உள்ள ஹர்பஜன் சிங், தமிழ் சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பளித்து உள்ள பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை குறிப்பிடும் விதமாக தலைவர், தல, தளபதி என தனது டுவிட்டரில் பதிவிட்டு அவர்களை உருவாக்கிய தமிழ் சினிமா என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே