விக்ரம் படத்தில் நடிக்கும் இர்பான் பதான்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 58வது படத்தில் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே