சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

தன் கணவர் ஈஸ்வர் டிவி நடிகை மகாலட்சுமியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறிய நடிகை ஜெயஸ்ரீ மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தேவதையை கண்டேன் தொடரில் நடித்து வரும் ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக நடிகை ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

தன் கணவர் ஈஸ்வர் தன் கண் முன்பே செல்போனில் வீடியோ கால் செய்து மகாலட்சுமியை கொஞ்சியதாக தெரிவித்தார் ஜெயஸ்ரீ.

மேலும் ஜெயஸ்ரீயை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஈஸ்வர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றார்.

ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே தான் கள்ளத்தொடர்பு என்றார் ஈஸ்வர்.

இதற்கிடையே ஈஸ்வர் தனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்று விளக்கம் அளித்தார் மகாலட்சுமி.

அனில் செய்தியாளர்களை சந்தித்து ஈஸ்வர் சொல்வதில் உண்மை இல்லை என்றும்; ஜெயஸ்ரீ தன் தங்கை போன்றவர் என்றும் கூறினார். அதை ஈஸ்வரும் ஒப்புக் கொண்டார்.

ஆளாளுக்கு புகார் தெரிவித்து வந்த நிலையில் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், வாழத் தகுதியற்றவளாக உணர்வதாகவும் தோழியிடம் செல்போனில் தெரிவித்துவிட்டு ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்த தோழி சந்தேகம் அடைந்து விரைந்து வந்து பார்த்தபோது ஜெயஸ்ரீ தன் வீட்டில் மயங்கிக் கிடந்தார்.

உடனே அவரை நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் தோழி. அங்கு ஜெயஸ்ரீக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சி செய்யும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில் தன் மகளை கொடுமைப்படுத்த வேண்டாம் என்று ஈஸ்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். டான்ஸ் ஆடுவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம் என்று மகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஜெயஸ்ரீ.

அவரின் தற்கொலை முயற்சியால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே