இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.நல்லக்கண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் – துணை முதல்வர் ட்வீட்..!!

அரசியல் வாழ்வில் தூய்மையும், எளிமையும் , நேர்மையும் கொண்டவரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு இன்று தனது 96வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளார்.

பொதுவாழ்வில் உயர்ந்த குணமும் நேர்மை தவறா வழியில் வாழும் தலைவர்களின் வரிசை மிகவும் அரிதாகி விட்ட இந்த காலகட்டத்தில் தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வரும் சுதந்திரபோராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு இன்று 96வது பிறந்தநாளாகும்.

அவரது பிறந்தநாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

நல்லக்கண்ணுவின் பிறந்தநாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான திரு.நல்லக்கண்ணு அவர்களுக்கு எனது உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.நல்லக்கண்ணு அவர்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியோடு பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே