2021-ல் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் – பாஜக அண்ணாமலை

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 2021 சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, தமிழக அமைச்சராக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் ஆயத்தப் பணிகளுக்கான தொடக்க விழாவில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிதான் விவசாயிகளை கூன் போட்டு நிற்க வைத்தது என குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், மத்திய அரசுடம் மேற்கு வங்க அரசு, இணைந்து செயல்படாவிட்டால் அறுத்தெறியப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேளாண் சட்டத்தில் மத்திய அரசு எந்த காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய முன்வராது என்றும், அரசியல் அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வரும் மு.க.ஸ்டாலின் தலைவராக இருக்கும் திமுக வரும் தேர்தலில் காணாமல் போகும் என்றும், 2021 சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, தமிழக அமைச்சராக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே