இராமநாதபுரத்தில் திருமணமான அன்றே மணமகன் உயிரிழப்பு..!!

திருமணமான அன்றே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர்.

இவர்களின் மகன் விக்னேஸ்வரன் (27). இவருக்கும் சாயல்குடி அருகே கடுகு சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த புதன்கிழமை காலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மணமக்கள் கடுகுசந்தையில் உள்ள மணமகள் வீட்டிற்கு வந்தனர். மதியம் 3 மணிக்கு மணமகன் விக்னேஸ்வரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனே சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விக்னேஸ்வரனின் இறுதி சடங்கு நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

காலையில் திருமணம் முடிந்து மாலையில் மணமகனின் இறப்பு இரு வீட்டார், உறவினர்கள், கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே