எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது பற்றி பேசத் திட்டமிட்டுள்ளோம் என சரத்குமார் கூறினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதிமய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி துணைப்பொதுச்செயலாளர் ரவிபாபுவும் சென்று சந்தித்து பேசினார்.

கமல்ஹாசனை சந்தித்து பேசிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மரியாதை, விகிதாசாரம் உள்ளது என்றுதான் அதிமுக உடன் இணைந்து பயணித்தோம்.

ஆனால் இப்போது அது இல்லை.

சமக-வை அழைத்து அதிமுக பேசும் என காத்திருந்தோம் ஆனால் அவர்கள் பேசாததால் விலகினேன். கூட்டணி பற்றி கமலிடம் பேசினேன்.

கமல்ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். நல்ல எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலிடம் பேசினேன்.

நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என கமல்ஹாசன் கூறியதால் சிறப்பான கூட்டணியை உருவாக்க திட்டம். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது பற்றி பேசத் திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

பணத்தை வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன். நல்லவர்கள் ஒத்த கருத்துடையவர்கள் உடன் கூட்டணி வைக்கப்படும்.

மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

இதனால் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஆகியவை கூட்டணி அமைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே