விபத்தில் சிக்கிய மூதாட்டியை தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை அருகே சாலை விபத்தில் சிக்கிய மூதாட்டியை தனது காரில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் அல்லி. 75 வயதான இவர், சாலையை கடக்க முயன்றபோது டிராக்டர் மோதியதில் காயம் அடைந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் தனது காரை நிறுத்தி, சாலையில் விபத்துக்குள்ளான மூதாட்டியை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். 

அங்கு மூதாட்டிக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து செல்லும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே