தூக்கில் தொங்கவிடப்பட்ட கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மை

பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கு என்ன தைரியம்? என ஐ.நா. சபையில் உலகநாடுகளைக் கடுமையாகச் சாடி பேசியவர் இளம் இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்க்.

Greta Thunberg

இவரால் ஈர்க்கப்பட்ட பள்ளிச் சிறார்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பருவ நிலை மாற்றத்தின் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பாலம் ஒன்றின் கீழ் கிரேட்டா தன்பெர்கின் உருவ பொம்மையை மர்மநபர்கள் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். அதில் கிரேட்டா உங்கள் கடவுள் என ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.

இத்தகைய மோசமான அச்சுறுத்தலுக்கு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த ரோம் நகர மேயர் விர்ஜினியா ரக்கி, கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மை தங்களது நகரில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பது வெட்கக் கேடானது என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே