49 பேர் மீது தேச விரோத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

மணிரத்தினம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு இயக்குனர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரசை விமர்சிப்பதால் ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்றும், கடிதம் எழுதியதற்காக தேசவிரோத வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது என்று பாரதிராஜா ஆதங்கப்பட்டார்.

கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும்; பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவது, மாற்றுக் கருத்துடையவர்களை பொய் வழக்குகள் மூலம் மௌனமாக்க முயல்வது ஏற்கத்தக்கது அல்ல என்றும் இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே