திற்பரப்பு அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோதை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில், ஆயுதபூஜை விஜயதசமி பண்டிகைகளால் தொடர் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர்.

அத்துடன் நீச்சல்குளம், சிறுவர் பூங்கா, படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே