பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவெடுப்பார் என அமைச்சர் சிவி. சண்முகம் கூறியுள்ளார்.
விழுப்புரம் நகராட்சி நூறாண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, புதிய நகராட்சி அலுவலக கட்டடம், தார்சாலை உள்ளிட்டவைகளை அமைக்கும் பணியை அமைச்சர் சிவி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவு எடுப்பார் என தமிழக முதல்வர் உட்பட அனைவரும் நம்புவதாகவும் தெரிவித்தார்.