திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பழனியில் இருந்து கோவை புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியும், அரசுப் பேருந்தும் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகின.
மோதிய வேகத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த பொள்ளாச்சி மற்றும் காரியாபட்டியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சென்ற சாமிநாதபுரம் காவல்துறையினர் லாரி ஓட்டுநர் ராஜேஷ், பேருந்தில் இருந்தவர்கள் என காயமுற்ற 20க்கும் அதிகமானோரை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.