சிவராத்திரி பிரசாதம் உண்ட 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!!

ராஜஸ்தானில் மகா சிவராத்திரி விழாவில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 70 பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் துன்கார்பூர் மாவட்டத்தில் உள்ள அஸ்பூர் கிராமத்தில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்பட்ட திருவிழாவில் அவ்வூர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் சிலபேருக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சுமார் 60-70 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய அம்மாவட்ட சுகாதரத்துறை அதிகாரி, பிரசாதத்தை சாப்பிட்டவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே