புராதன சின்னமாக விளங்கும் ஆணைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டை முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான ஆணைப்புளி மரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, புராதன சின்னமாக விளங்கும் ஆணைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டை முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், இம்மரம் பல நூற்றாண்டுகள் வாழக்கூடியது. இம்மரம் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தது. இந்தியாவில் 6 இடங்களில் மட்டுமே இந்த மரம் உள்ளது.