தங்கம் விலை ரூ.70,000 வரை உயர வாய்ப்பு?… வெளியான அதிர்ச்சி தகவல்.. எட்டா கனியாக மாறிய தங்கம்!!

நாடு முழுவதும் கொரோனா எனும் கொடிய நோயின் அச்சுறுத்தல் ஒரு புறம் வாட்டி வதைக்கும் நிலையில், தின்தோறும் எகிறும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை 70,000த்தையும் தொடலாம் என வெளியாகும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தில் தங்கம் என்பது ஒரு முக்கிய அம்சமாகவே பார்க்கப்படுகிறது.ஏனெனில் குழந்தை பிறப்பு முதல் சடங்கு சம்பிரதாயம், காதுகுத்து, திருமணம், கருமாதி வரையில் தங்கம் ஒரு அம்சமாகவே இருந்து வருகிறது.

நம் நாட்டை பொறுத்தவரையில் தங்கம் மீதான முதலீடு என்பது இரண்டாவது பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது அனுதினமும் வரலாறு காணாத புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்பட, அவுன்ஸூக்கு 2,000 டாலர்களுக்கு மேல் வர்த்தகமாகியது. இது விரைவில் 3,000 தொடக்கூட வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய எம்சிஎக்ஸ் சந்தையிலும், தங்கம் விலையானது புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 54,780 ரூபாய் அருகில் வர்த்தகமாகியும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஜேபி மார்கன் அறிக்கையின் படி, வரும் தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் விலையானது 70,000 ரூபாயினை தொடலாம் என்று கூறுகின்றனர்.

உலககெங்கிலும் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், பொருளாதாரமானது சரிந்து வருகிறது. இன்று வரையிலும் கூட கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி தங்களது முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி விடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையின் உச்சம் 57,008 ரூபாயாகும். இதே தங்கம் விலையினை தொடர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 77,840 ரூபாயினை தொட்டது. இது தான் வெள்ளியின் புதிய உச்சமாகும். இது தான் இந்த விலையுயர்ந்த உலோகங்களின் புதிய உச்சம் என ஹெச் டி எஃப்சியின் அறிக்கை கூறுகின்றது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.216 குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ. 27 குறைந்து ரூ.5,358 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் 43,000 த்தை தாண்டிய தங்கத்தின் விலை 2ம் நாளாக இன்று வார துவக்கத்திலேயே சற்று இறங்கியது வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை அளித்து வந்தது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை எந்தளவுக்கு ஏற்றம் காணுமோ என தெரியவில்லை.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே