சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 440 சரிந்து சவரன் விலை ரூ 39,944 க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வதும் சரிவதும் வாடிக்கையாக இருந்தது.
கொரோனா பீதியில் கடைகள் மூடப்பட்டிருந்ததால் தங்கத்தின் விலை அதிகரித்தது.
இந்த தங்கத்தின் விலை வரலாறு காணாது உயர்ந்துள்ளது. சவரன் ரூ 30 ஆயிரத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது ரூ 40 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 440 குறைந்துள்ளது.
அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 39,944-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமின் விலை ரூ 4993க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ 5000-த்திற்கு கீழ் தங்கத்தின் விலை குறைந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ 700 அதிகரித்து ரூ 72 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருகிறது.