ஆக.10ம் தேதி கடையடைப்பு இல்லை… தற்காலிகமாக ஒத்திவைப்பு: வணிகர் சங்கங்களின் தலைவர்

ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவிருந்த காய்கறி, பழம், பூக்கடைகள் அடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டிற்கு காய்கறி சந்தையை மாற்ற கோரி நடைபெற இருந்த கடையடைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்தையை கோயம்பேட்டிற்கு மாற்றுவதற்கான சூழல் வந்துள்ளதால் கடைகள் அடைப்பு ஒத்திவைக்கப்படுவதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மற்றும் ஆந்திர எல்லை மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்யும் சந்தையாகவும், காய்கறி, பழம், மலர் சந்தையின் முக்கியச் சந்தையாகவும் கோயம்பேடு காய்கனி அங்காடி விளங்கியது. பல ஏக்கர் பரப்பளவில் மூன்று சந்தைகளும், அருகிலேயே வெளியூர் செல்லும் பேருந்து நிலையம், வாகனங்கள் நிறுத்த வசதி எனத் திகழும் பிரம்மாண்டமான கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பிடியில் இருந்து தப்பவில்லை.

இதனால் மார்க்கெட்டை 3 ஆக பிரித்து வேறு இடங்களில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு காய்கனி அங்காடியை மூடி மாதக்கணக்கில் ஆகியும் அரசு திறக்காமல் இருப்பதால், உடனடியாக திறக்க வேண்டும் என்றும், திருமழிசை அங்காடியில் வசதி குறைவாக உள்ளதாலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் முடிவில் ஆக.10ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே