தங்கம் விலை குறைந்தது… இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5087ஆகவும், 8 கிராம்  ரூ.40,696ஆகவும் உள்ளது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.66.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.66,700ஆக உள்ளது.

தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.4 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது.

இருப்பினும், கடந்த 17-ம் தேதி சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,520-க்கும், 20-ம் தேதி நேற்று சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து  ரூ.37,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் அதிகளவில் விசேஷ தினங்கள் வருகிறது.

இந்த நேரத்தில் விலை குறைந்தும், உயர்ந்தும் வருவது நகை வாங்க பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே