இரு மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்..!!

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது.

ஏற்கனவே முதல்வர் பழனிசாமி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டியிருந்தார்.

5 புதிய மாவட்டங்களில் தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை .

சமீபத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 

அதில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாகவும், வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது.

அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியும், நெல்லையிலிருந்து தென்காசி மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே