துணிப்பை, சணல் பை கொண்டு வருவோர்க்கு குலுக்கல் முறையில் தங்கம் பரிசு

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்தும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு திருவிழாவை ஒட்டி இதேபோன்ற அறிவிப்பை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் 10-ம் தேதி மாலை 6 மணி வரை இதற்கான கூப்பன்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக குபேரலிங்கம், அண்ணா நுழைவு வாயில், பெரியார் சிலைக்கு அருகில் இதற்காக குடில்கள் அமைக்கப்பட உள்ளன.

கணினி முறையில் குலுக்கல் நடத்தப்பட்டு

  • 12 நபர்களுக்கு தலா 2 கிராம் தங்கம்,
  • 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும்.

துணிப்பை கொண்டு வந்து கூப்பன் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசாக மேலும் ஒரு துணிப்பை வழங்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே