உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை: வைகோ

மதச்சார்பின்மைக்கு வேட்டு வைத்து ஜனநாயகத்தை அழித்து வருவதாக மத்திய அரசு மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமேதை அம்பேத்கரின் 63வது நினைவு நாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் அதிமுக-வுக்கு இல்லை என்றும்; தேர்தலை நடத்த வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் எதற்காக மாவட்டங்களை பிரிக்கவேண்டும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் மதச்சார்பின்மையை அழித்து ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை மத்திய அரசு செய்துவருவதாகவும் , அதை எதிர்த்து மதச்சார்பின்மையை நிலைநாட்ட ஒன்றுபட வேண்டிய நிலை உள்ளது என அவர் தெரிவித்தார்.

மதிமுக – திமுக கூட்டணியோடு உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே