கோத்ராவில் நடந்தது மீண்டும் நடக்கும் : கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

வன்முறையில் ஈடுபட்டால் கோத்ராவில் நடந்தது மீண்டும் நடக்கும் என கர்நாடக அமைச்சர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தினால் கர்நாடகா பற்றி எரியும் என கர்நாடக தலைவர்களில் ஒருவரான காதர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பதிலளித்துள்ள கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி, கோத்ராவில் கரசேவர்களை எரித்து கொன்றவர்களுக்கு பதிலடியாக என்ன கிடைத்தது என்பதை  நினைத்து பார்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கர்நாடகா பற்றி எரிந்தால் கோத்ராவில் நடந்தது மீண்டும் நடக்கும் என்றும்; பெரும்பான்மையானவர்களின் பொறுமையை சோதித்தால் என்ன நடக்கும் என்பதை வரலாற்று நிகழ்வுகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே