காஷ்மீரில் கடும் குளிரில் சிக்கி உயிருக்கு போராடிவரும் 500-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களை மீட்பது தமிழக அரசின் கடமை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் அமைச்சர் தங்கமணி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி காஷ்மீரில் சிக்கியுள்ள லாரி ஓட்டுநர்களை மீட்பது தமிழக அரசின் கடமை என தெரிவித்தார்.
மேலும் அவர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.