அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 1580 கோடி ரூபாயை ஜெர்மனி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.

டெல்லியில் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணரும் யாரும், டீசல் பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என்றும் ஜெர்மனி பிரதமர் குறிப்பிட்டார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே