இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,374 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 77 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,3072ல் இருந்து 3,374 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 75ல் இருந்து 77 ஆகவும் அதிகரித்துள்ளது.
267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- அதிகபட்சமாக மஹாராஷ்டிரா – 490
- தமிழகம் – 485 பேரும்,
- கேரளா – 445
- டில்லி – 306
- தெலுங்கானா – 269
- உ.பி.,- 227
- ராஜஸ்தான் -200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
அதேபோல், மஹாராஷ்டிராவில் 24 பேரும், தமிழகத்தில் 4 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.