கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூருக்கு சென்ற 107 பேருக்கு இன்று கொரோனா!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து ஊர் திரும்பியவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களில், கடலூரில் 105 பேருக்கும், விழுப்புரத்தில் 50 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் திரும்பிய 700 பேருக்கு படிப்படியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட் தொடர்பின் மூலம் கடலூரில் இன்று ஒரே நாளில் மட்டுமே 105 பேருக்கும்,  இதனால் கடலூரில் மொத்த பாதிப்பு 160-ஆக அதிகரித்துள்ளதால் மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து விழுப்புரம் சென்ற கூலித்தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த 50 பேர் அடங்கிய 15 கிராமங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 136-ஆக அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கரூர் திரும்பிய கூலித் தொழிலாளி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சோழிங்கநல்லூரில் மளிகைக் கடை வைத்திருக்கும் 26 வயது நபர், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கிச் சென்ற நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்கி நகர்ப் பகுதிகளில் விற்பனை செய்துவந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலைச் சேர்ந்த நபர், ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே