#BREAKING : டிக் டாக் ரேட்டிங்கை குறைத்த இந்தியர்கள்!

இணையத்தில் புதியதாக அறிமுகமாகும் செயலிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைப்பது இயல்பான ஒன்று.

அப்படி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு செயலி டிக் டாக்.

பாடல்கள் , படக்காட்சிகள், சொந்தமாக கிரியேட் செய்து வெளியிடப்படும் வீடியோக்கள் என்று திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு செயலியாக டிக்டாக் செயல்பட்டு வந்தது.

ஆரம்பகாலத்தில் நடிகர்கள் பாடல்களுக்கு தங்களுடைய நடிப்பு பாவனைகளை கொடுத்து வந்த பல பயன்பாட்டாளர்கள் போகப்போக டிக் டாக் செயலியை பயன்படுத்தும் போக்குகள் மாற ஆரம்பித்தது.

டிக் டாக் செயலியிலும் ஆபாசத்தை நுழைக்க பல பயன்பாட்டாளர்கள் இந்த செயலியை பயன்படுத்துவதில் இருந்து பின் வாங்க ஆரம்பித்தார்கள். 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் , குழந்தைகளுடன் ஆபாச வீடியோக்கள், பாடல் காட்சிகளுக்கு அதிக ஆபாசத்துடன் வீடியோக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வர ஆரம்பித்தது.

இந்நிலையில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது.

ப்ளே ஸ்டோரில் ஒவ்வொரு செயலிக்கும் ஸ்டார் ரேட்டிங் கொடுப்பது அந்த செயலியை பயன்படுத்துவோர் மற்றும் தரவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும்.

அந்த வகையில் கடந்த மாதத்தில் 4.4 ஆக இருந்த ஸ்டார் ரேட்டிங் தற்போது 2.0 வாக மாறி இருக்கிறது.

#BanTikTok என்ற ஹேஷ்டேக்கை இந்தியர்கள் பிரபலப்படுத்தியதன் எதிரொலியாக கடந்த 3, 4 தினங்களுக்கு முன் கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.5ஆக இருந்த டிக் டாக் செயலியின் ரேட்டிங் மதிப்பு தற்போது 2ஆக குறைந்தது.

டிக்டாக் செயலி தரவிரக்கம் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதை இந்த ஸ்டார் ரேட்டிங் காட்டுகிறது.

மேலும் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு காலத்திலும் டிக்டாக் செயலி அதிகமாக பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

நாளுக்கு நாள் பாலியல் தொடர்பான வன்முறைகளைத் தூண்டும் ஆபாசப் பதிவுகள், வீடியோக்கள் டிக் டாக் செயலியில் அதிகமாக இடம்பெறுவதால் பயன்பாட்டாளர்கள் இந்த செயலியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்கள்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகார்கள் காரணமாகவும் டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது.

இதே நிலை நீடித்தால் ஆர்குட்டைப் போல டிக்டாக்கையும் ஒருநாள் இழுத்து மூட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகிவிடும் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே