Whataspp Status மீண்டும் 30 விநாடிகளாக அதிகரிப்பு….

Whatsapp Status அளவு கடந்த மார்ச் மாத இறுதியில் அதன் காலளவு 15 விநாடிகளாக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது அது மீண்டும் 30 விநாடிகளாக அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கோவிட்-19 தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளில் தனது கோரத்தாண்டவத்தை நிகழத்தி வருகிறது.

மேலும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.

இதனால் மக்களிடம் ஆன்லைன் பயன்பாடானது முன்பு விட அதிகரித்துள்ளது.

இதில் கொரோனா குறித்த தவறான செய்திகள், தவறான கொரோனா புகைப்படங்கள் போன்றவற்றை சிலர் சமூக வலைதளங்களில் வாயிலாக பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து அண்மையில் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன நிறுவனங்களின் கூட்டமைப்பும், கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டது.

அதாவது தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களை சமாளிப்பதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை குறைத்தது.

அது என்னவென்றால். இதற்குமுன்பு வரை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு 20வினாடி வரை வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அது 15வினாடிகளாக குறைக்கப்பட்டது.

வாட்ஸ்ஆப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் 30 விநாடிகள் எனப்படும் வரம்பு நிலை வீடியோ ஸ்டேட்டஸ்களை மீட்டமைக்கிறது.

ஆண்ட்ராய்டு பதிப்பு 2.20.166-க்கான வாட்ஸ்அப் பீட்டாவின் ஒரு பகுதியாக இந்த புதுப்பிப்பு கிடைக்கிறது.

வாட்ஸ்அப் iOS வாட்ஸ்அப்பின் iOS- அடிப்படையிலான பயன்பாட்டிற்கு வரம்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தெரியவில்லை.

தனித்தனியாக, நிறுவனம் தனது iOS அடிப்படையிலான பயன்பாட்டிற்கான புதுப்பிப்பை வெளியிடுகிறது. .

வலைப்பதிவு தளத்தால் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களின்படி, அரட்டை சாளரத்தின் கீழ் இடது மூலையில் உள்ள இணைப்பின் மூலம் தேர்வி மெனுவில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ கேலரி விருப்பத்தின் மேல் அதற்கான சார்ட்கட் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே