ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு..!!

தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் கூறி உள்ளதாவது: தடுப்பூசி மற்றும் ஆராய்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் 2 தடுப்பூசிகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. வர உள்ள நாட்களில் தடுப்பூசி விநியோகம் பல மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியாவில் 7 நிறுனங்கள் ஈடுபட்டு உள்ளன. உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசி பெற்று செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மாநிலங்கள் ஊரடங்குகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டி வருகிறது.

ஊரடங்கில் மாநிலங்கள் தளர்வு அளித்த போதும் மத்திய அரசு வழிகாட்டுகிறது. தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் முடிவுக்கு வரும்.

தடுப்பூசி கொள்கையை, மாநிலங்களுக்கு ஏற்கனவே வகுத்தளித்துள்ளோம். மாநிலங்களின் தடுப்பூசி தேவையை அறிந்திருக்கிறோம். அதனை பூர்த்தி செய்வோம். தடுப்பூசி கொள்கையில் தளர்வு வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.

அதனை மத்திய அரசு ஏற்று கொண்டு உள்ளது. நாங்கள் ஏன் தடுப்பூசியை தயாரிக்கவில்லை என மாநிலங்கள் கேள்வி எழுப்புகின்றன. மத்திய அரசு, தடுப்பூசி விஷயத்தில் மாநிலங்களுக்கு வகுத்துள்ள விதிகளின் படியே தொடர்ந்து செயல்படுகிறது.அரசியல் செய்கிறார்கள்தடுப்பூசி இயக்கம் தொடர்பாக சிலர் அரசியல் செய்கிறார்கள் அது கண்டனத்திற்குரியது. தடுப்பூசி கொள்கை தொடர்பாக பல்வேறு கேள்விகள் வைக்கப்படுகின்றன.கேள்வி எழுப்பபவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள்.

அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நமது குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது எங்களது விருப்பம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் முக்கியம். அதில், சமரசமில்லை.மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வினியோகத்தில் இனி மத்திய அரசே முடிவெடுக்கும். தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்கு செலவு செய்ய தேவையில்லை.தடுப்பூசி திட்டத்திற்காக 75 சதவீத தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்யும்.

மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய அரசே ஏற்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தலாம். 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும். ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க துவங்கும்.

அதேபோல், மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசிகள் கொள்முதல் செய்யத் தேவையில்லை. ஏழைகள், நடுத்தர மற்றும் மத்திய தர மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் மாதம் தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேசன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். இதன்மூலம் 80 கோடி பேர் பயன்பெறுவர்.பல இடங்களில் கோவிட் குறைந்து வருகிறது. அங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே