இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள்…

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தில்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது சதைவ் அடல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அவரது நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 90 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இதேபோல் வாஜ்பாயின் பெயரில் அமையவுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோட்டாங் கணவாய்க்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நயா ராய்ப்பூருக்கும் அட்டல் நகர் என வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே