டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை..!!

திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் நகரின் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் விடாமல் கனமழை பெய்து வருகிறது.

விளமல், புலிவலம், அடியக்கமங்கலம், மாங்குடி, நன்னிலம், குடவாசல் பூந்தோட்டம், பேரளம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் வல்லம், சூரக்கோட்டை, கண்டியூர், பூதலூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் பெய்து வருகிறது.

இதனால் கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயம் சென்ற கிறிஸ்துவர்கள் சிறிது சிரமத்திற்கு ஆளாயினர்.

இதனிடையே லேசான வளிமண்டல சுழற்சியின் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழையும்; கடலோர மாவட்டங்கள், அதையொட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை ஆய்வு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே