தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்..!!

தினமலர் முன்னாள் ஆசிரியர் ஸ்ரீ. ஆர். கிருஷ்ணமூர்த்தி காலமானார். தினமலர் எடிட்டர் ராமசுப்பு என்ற அந்துமணியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆவார்.

முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி நாணயவில் அறிஞர் ஆவார். இவர் சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்தார்.

தமிழகத்தில் பிரபலமான தினமலர் நாளிதழ் முன்னாள் ஆசிரியராவார்.

நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் முதன் முதலில் கண்டவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. 

தமிழக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.

பத்திரிகையை துறையில் சிறந்து விளங்கியதால் தமிழ் அச்சு மொழி வளர்ச்சியைப் பண்படுத்தியவர். கணினிக்கு ஏற்றவகையில், தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி, தெளிவு மிக்க தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர்.

இப்படி, பன்முகத்திறன்கள் படைத்த முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே